”ஜனவரி முதல் வாரத்திலும் வடகிழக்கு பருவமழை நீடிக்கும்” - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

டிசம்பர் மாதத்தோடு முடிவடையும் வடகிழக்கு பருவமழை ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும். என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
பிரதீப் ஜான்
பிரதீப் ஜான்pt web

தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த பெருமழை காரணமாக மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீர் ஜான் தனது X வலைதள பக்கத்தில் மழை தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில்....

chennai rain
chennai rainpt desk

”தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை வழக்கமாக டிசம்பர் மாதத்தோடு முடிவடையும் நிலையில், இந்த முறை ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும். இன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்” என்றும் பிரதீர் ஜான் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட செல்லும் மக்கள் குடை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ள அவர், மிதமான மழை பெய்தாலும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் மாஞ்சோலை பகுதியில் வரும் நாட்களில் கனமழை பெய்யலாம் என்றும், ஆனால் அதுவும் சமாளிக்கக் கூடிய வகையிலேயே இருக்கும் என்றும் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com