பிரசித்திபெற்ற சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் மழையின் காரணமாக சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.
மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில் போன்ற பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு எப்போதும் உள்ளூர் மட்டுமல்லாது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகம் இருக்கும் நிலையில், கடந்த ஐந்து நாட்களாக பெய்துவரும் மழையால், மாமல்லபுரமே வெறிசோடி காணப்படுகிறது. வெண்ணை உருண்டைகல், அர்ஜூனன் தபசு, கடற்கரை கோயில் போன்ற பகுதிகளில் ஒரு சில சுற்றுலாப் பயணிகளே காணப்படுகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளை நம்பியே வாழும் சுற்றுலாவழிகாட்டிகள் ,வியாபாரிகள் போன்றோர் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தனர்