மழைpt web
தமிழ்நாடு
48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை.. 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழ்நாடு அதிகளவில் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூரிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.