\
தமிழ‌கத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை

தமிழ‌கத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை

தமிழ‌கத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை
Published on: 

தமிழ‌கத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது,  வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்குள் தமிழகம் மற்றும் தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா,  கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. தென்கிழக்கு தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளனர். 
இதன்காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com