\
தொடங்கியது வடகிழக்கு பருவமழை - எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

தொடங்கியது வடகிழக்கு பருவமழை - எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

தொடங்கியது வடகிழக்கு பருவமழை - எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?
Published on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இவ்வாண்டு பெய்யும் மழையின் அளவானது சராசரியை ஒட்டியோ  அல்லது அதை விட அதிகமாகவோ இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையைப் பொருத்தவரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com