மின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் நானே பொறுப்பேற்கிறேன்: அமைச்சர் தங்கமணி
மின்சாரம் தொடர்பாக புகார்கள் வந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தானே பொறுப்பேற்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வடகிழக்கு பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் வெள்ளக்காடாக ஓடியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மழையின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி, சென்னையில் முன்னெச்சரிக்கை கருதி சேவை நிறுத்தப்பட்டிருந்த பல பகுதிகளில் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மின்பெட்டிகள் திறந்த நிலையில் இருந்தால் அதனை மூடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறினார். மின்சாரம் தொடர்பாக புகார்கள் வந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தானே பொறுப்பேற்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.