காஞ்சிபுரம்: புதிதாக கடைதிறந்த வடமாநில இளைஞர்... உள்ளூர்வாசிகள் தாக்குதலால் அச்சம்

காஞ்சிபுரம்: புதிதாக கடைதிறந்த வடமாநில இளைஞர்... உள்ளூர்வாசிகள் தாக்குதலால் அச்சம்
காஞ்சிபுரம்: புதிதாக கடைதிறந்த வடமாநில இளைஞர்... உள்ளூர்வாசிகள் தாக்குதலால் அச்சம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமாநில இளைஞரொருவர் புதிதாக கடை திறந்திருக்கிறார். அந்தக் கடையால் தனக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் உள்ளூரை சேர்ந்த ஒருவர். இதைத்தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (24). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஆரனேரி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். பல வருடங்களாக லேபராகவே வேலை பார்த்து வந்த அவர், தற்போது சொந்தமாக ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் தொடங்கியுள்ளார். நேற்று அந்தக்கடையை புதிதாக திறந்துள்ளார் அவர்.

இந்தநிலையில் அதே பகுதியில் உணவகம் வைத்துள்ள மற்றொருவர், தனது ஆதரவாளர்களுடன் நேற்று இரவு வட மாநில இளைஞர் நடத்தி வரும் புதிய உணவகத்துக்கு சென்றுள்ளார். அப்போது ‘உன்னால் எனது வியாபாரம் பாதிக்கப்படுகிறது’ எனக் கூறி வடமாநில இளைஞரிடம் வாக்குவாதம் செய்து கடையை திறக்க வேண்டாம் என வற்புறுத்தி மிரட்டி உள்ளார்.

இதற்கு சந்தோஷ் மறுப்பு தெரிவிக்கவே, கடையிலிருந்த ஜல்லி கரண்டியை எடுத்து சந்தோஷ் மீது பலமாக தாக்குதல் நடத்திவிட்டு சென்றுள்ளார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வடமாநில இளைஞர் மீது நடத்திய தாக்குதல் தொடர்பாக ஶ்ரீபெரும்புதூர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சந்தோஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com