தமிழ்நாடு
பருவமழை எதிரொலி: நாகை அடப்பாற்றில் கோட்டாட்சியர் ஆய்வு
பருவமழை எதிரொலி: நாகை அடப்பாற்றில் கோட்டாட்சியர் ஆய்வு
நாகை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை, வெள்ளக் காலங்களில் தண்ணீர் வடியும் அடப்பாற்றை கோட்டாட்சியர் கண்ணன் ஆய்வு செய்தார்.
வேதாரண்யம் அருகே மழை, வெள்ள நீர் வடிவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாலுவேதபதி அடப்பாறு முகத்துவாரப் பகுதியில் நாகை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார். தலைஞாயிறு வழியாக செல்லும் அடப்பாற்றில் உப்பு நீர் உள்ளே புகாதவாறு தடுக்க கட்டப்படும் தடுப்பணை பணிகளால் ஏற்பட்டுள்ள தடுப்புகள் குறித்து பார்வையிட்டார். கடல் முகத்துவாரத்தில் வெள்ள நீர் வடிய தடையாக இருக்கும் மண்மேடுகளையும் பார்வையிட்டார்.இதைத்தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் அடப்பாற்றின் முகத்துவாரத்தில் உள்ள மண்மேடுகள் மற்றும் தடுப்புகளை அகற்றுவது குறித்து வருவாய்த்துறை,பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

