தண்ணீரில் தத்தளிக்கும் முடிச்சூர்: பொதுமக்கள் சாலை மறியல்

தண்ணீரில் தத்தளிக்கும் முடிச்சூர்: பொதுமக்கள் சாலை மறியல்

தண்ணீரில் தத்தளிக்கும் முடிச்சூர்: பொதுமக்கள் சாலை மறியல்
Published on

கனமழையால் முடிச்சூர் பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. முடிச்சூர் பகுதியில் மழையின் காரணமாக சாலையில் தேங்கிய மழைநீரில் அமர்ந்தபடி பொதுமக்கள் மறியல் செய்தனர். மழைநீர் வடிவதற்கு முறையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால்‌ ஒவ்வொரு வருடமும் பாதிப்புக்கு உள்ளாவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மழைநீர் தேங்கும்போது ஆய்வு மட்டும் நடத்தும் அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்கள், அதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். சென்னையில் கடந்த 4 தினங்களாக பெய்து வரும் கனமழையால், முடிச்சூர் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையின்போதும் முடிச்சூர் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com