வேதாரண்யத்தில் கடல் சீற்றத்துடன் பலத்தக் காற்று வீசிவருவதால், 7வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடல் சீற்றத்துடன் பலத்தக் காற்று வீசி வருகிறது. இதன்காரணமாக ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உட்பட 10கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 5000 மீனவர்கள் ,மீன்பிடிக்கச் செல்லாததால் 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.
சீர்காழி அருகே மழையின் காரணமாக பழையாறு, பூம்புகார், தரங்கம்பாடி உட்பட 26 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 6வது நாளாக மீன்பிடிக்கச் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் 6000 பைபர் படகுகள் 750 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை.