தரமற்ற புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு – 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

தரமற்ற புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு – 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்
தரமற்ற புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு – 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

சென்னை புளியந்தோப்பு தரமற்ற குடிசை மாற்று வாரிய வீடுகள் விவகாரத்தில் 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

புளியந்தோப்பில் தரமற்ற குடிசைமாற்று வாரிய வீடுகள் விவகாரம் தொடர்பாக குடிசை மாற்றுவாரிய உதவிப்பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாகப் பொறியாளர் அன்பழகன் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தரமற்ற வீடுகள் கட்டப்பட்ட விவகாரத்தில் புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் தவறு செய்திருந்தால், அவரையும் பிளாக் லிஸ்டில் சேர்ப்போம் என்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com