“கட்சியில் இல்லாதோரும் மக்கள் நீதி மய்யத்தில் போட்டியிடலாம் - கமல்ஹாசன்

“கட்சியில் இல்லாதோரும் மக்கள் நீதி மய்யத்தில் போட்டியிடலாம் - கமல்ஹாசன்

“கட்சியில் இல்லாதோரும் மக்கள் நீதி மய்யத்தில் போட்டியிடலாம் - கமல்ஹாசன்
Published on

நாடாளுமன்றத் தேர்தலுக்கான, மக்கள் நீதி மய்யத்தின் விருப்ப மனுக்கள் நாளை மறுதினம் முதல் வழங்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. 

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்காக அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தலிலுக்கான, மக்கள் நீதி மய்யத்தின் விருப்ப மனுக்களை நாளை மறுதினம் முதல் மார்ச் 7ஆம் தேதி வரை கட்சியின் சென்னை அலுவலகம் மற்றும் பொள்ளாட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

புதியதோர் தமிழ்நாட்டை உருவாக்க விழைவோர், இவ்விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராக இல்லாதவர்களும் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு அளித்தவர்களிடம், கட்சியின் தேர்தல் குழு அறிவிக்கும் தேதியில் நேர்காணல் நடத்தப்படும் என்றும் கமல்ஹாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com