தமிழ்நாடு
கணக்கில் வராத சொத்து: கார்த்தி சிதம்பரத்திற்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
கணக்கில் வராத சொத்து: கார்த்தி சிதம்பரத்திற்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரிட்டனில் உள்ள கணக்கில் காட்டாத சொத்து, அதை வாங்க எவ்வளவு தொகை செலுத்தப்பட்டது என்பன போன்ற விளக்கங்கள் கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதேபோல கார்த்தி சிதம்பரத்தின் தாயார் மற்றும் மனைவிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வருமான வரித்துறை அனுப்பிய இந்த நோட்டீஸூக்கு கார்த்தி சிதம்பரம் பதிலும் அனுப்பியுள்ளார். அதில், தான் வருமான வரி தாக்கல் செய்த போதே பிரிட்டனில் உள்ள சொத்து குறித்து குறிப்பிட்டுள்ளதாகவும், தான் ஏற்கனவே சொத்து விவரங்களை வெளியிட்டிருப்பதால் நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.