வேட்புமனு பரிசீலனை தொடக்கம்.. தலைவர்களின் வேட்புமனு நிலவரம் என்ன?
234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கும் சூழலில் தான், மார்ச் 30-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (ஏப்ரல் 6) முடிவடைந்தது. முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேசமயம், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் மனுதாக்கல் செய்திருக்கிறார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி, வேட்புமனு பரிசீலனையில், ஸ்டாலின், கே. பழனிசாமி, சீமான் ஆகியோரின் வேட்புமனு ஏற்கப்பட்டிருக்கிறது. திருச்சி கிழக்கில் விஜயின் வேட்புமனு ஏற்கபட்டாலும், பெரம்பூரில் பாமகவின் ஆட்சேபனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனினும், பெரம்பூரிலும் விஜயின் வேட்புமனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வேட்புமனுவை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.

