
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்திருக்கிறது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறபெறவிருக்கிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிட 74,416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 12,838 வார்டுகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு 22ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
நேற்றுடன் மனுதாக்கல் செய்ய கால அவகாசம் நிறைவுபெற்ற நிலையில், இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நிறைவுபெற்றது. இந்நிலையில் இன்று வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடவுள்ளது. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பின்பு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.