\

'யாராலும் என்னை பதவியில் இருந்து நீக்க முடியாது': ஓ.பன்னீர்செல்வம்

'யாராலும் என்னை பதவியில் இருந்து நீக்க முடியாது': ஓ.பன்னீர்செல்வம்
Published on: 

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் 40 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ’என்னை கட்டாயப்படுத்தியதால் தான் ராஜினாமா செய்தேன்’ எனக் கூறினார். இதையடுத்து அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு அப்பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டு உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்தார்.

இந்நிலையில், பொருளாளர் பதவியில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது. 10 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா என்னை பொருளாளராக நியமித்தார். எனது பணியை நிறைவாக செய்திருக்கிறேன் என்ற மன நிறைவு எனக்கு இருக்கிறது. ஜெயலலிதாவால் கொடுக்கப்பட்ட பதவியில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com