தமிழ்நாடு
சிறுக சிறுக பணம் சேர்த்த பாட்டி: உயிரிழந்த பின் பயன்படாமல் போன சோகம்
சிறுக சிறுக பணம் சேர்த்த பாட்டி: உயிரிழந்த பின் பயன்படாமல் போன சோகம்
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தை அடுத்துள்ள பெரியமாம்பட்டு கிராமத்தில் மூதாட்டி ஒருவர், இறுதி சடங்கிற்காக மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை சேர்த்து வைத்திருந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தை அடுத்துள்ள பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த மூதாட்டி லஷ்மி. வயது 75. இவருக்கு கணவரோ பிள்ளைகளோ இல்லை. இந்நிலையில் முதுமையின் காரணமாக இன்று உயிரிழந்தார். தாம் இறந்த பிறகு ஈமசடங்கு செலவுகளுக்காக சிறுக சிறுக 32,000 ரூபாய் அவர் சேர்த்து வைத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால் அவை மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள். லஷ்மி பாட்டி சேர்த்துவைத்த பணம் அவருக்கே பயன்படாமல் போனது அப்பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியது.