”கழிவறை, சாக்கடை வசதிகள் கூட இல்லை”- தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா

”கழிவறை, சாக்கடை வசதிகள் கூட இல்லை”- தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா

”கழிவறை, சாக்கடை வசதிகள் கூட இல்லை”- தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா
Published on

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி கக்கன்ஜி காலனி பொதுமக்கள், தங்கள் காலனி பகுதிக்கு குடிநீர் - சாக்கடை - கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று இதுதொடர்பாக கோரிக்கை மனு அளிக்கவே கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றிருந்தனர். அப்போது ‘மாவட்ட ஆட்சியரை சந்திக்க வேண்டும்’ என அவர்கள் அங்கிருந்த போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக குறிப்பிட்ட நபர்கள் மட்டும் செல்ல போலீசார் அனுமதித்தனர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள், ‘அனைவரும் செல்லவேண்டும்’ எனக்கூரி போலீசாரின் தடுப்புகளை மீறி ஆவேசத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உள் நுழைய முயன்றனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வந்து தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ‌. பின்னர் தரையில் படுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முயன்றனர் சிலர். அப்படி முயன்ற வாலிபரொருவரை போலீசார் தூக்கி கைது செய்த முயற்சி செய்தபோது, போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் தகவலறிந்த மாவட்ட நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதிகாரிகள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கக்கன்ஜி காலனி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கோரிக்கை அளித்துவிட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com