\
வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி தரப்பு திட்டவட்டம்

வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி தரப்பு திட்டவட்டம்

வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி தரப்பு திட்டவட்டம்
Published on: 

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்கமாட்டார் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு 100% வரமாட்டார் எனவும், தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்கமாட்டார் எனவும் என்றும அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு நிர்வாகி சுதாகர் தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார்.

மேலும், ரஜினிகாந்தின் மனைவி லதா கட்சி தொடங்குவதாக வரும் தகவல்களில் உண்மையில்லை எனவும், அர்ஜுன மூர்த்தி கட்சி தொடங்கினால் ரஜினி மக்கள் மன்றத்துக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்றும் சுதாகர் தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com