Govt School studentspt desk
தமிழ்நாடு
விழுப்புரம்: வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்
விழுப்புரம் அருகே அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததாலும், பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதாலும் மாணவர்கள் மரத்தடியில் தார்ப்பாய் விரித்து கல்வி பயிலும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குண்டலிப்புலியூரில் இயங்கி வரும் இந்த அரசு உயர் நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்திலேயே ஆரம்பப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி கடந்த 2017-ல் நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
Govt schoolpt desk
தற்போது ஆரம்பப் பள்ளி செயல்பட்ட இடத்திலிருந்த பழமையான கட்டடம் அகற்றப்பட்டதால் போதிய வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அருகில் உள்ள மழைநீர் வடிகால்கள் சீரமைக்கப்படாததால், மழைநீர் பள்ளி வளாகத்தில் தேங்கும் சூழல் உள்ளது.
”அந்த 3 பேரும் இல்லாவிட்டால், இந்தியா அவ்ளோ தான்! இலங்கை போட்டியின் நிலைதான்”- பாக். முன்னாள் வீரர்!
ஊராட்சி நிர்வாகம் முன்வராததால், மாணவர்களே மழைநீரை அகற்றி கல்வி பயிலும் சூழல் உள்ளது. இந்நிலையில், ஆய்வு செய்து கூடுதல் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.