\
பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு இல்லை - சத்ய பிரதா சாஹூ

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு இல்லை - சத்ய பிரதா சாஹூ

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு இல்லை - சத்ய பிரதா சாஹூ
Published on

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தேர்தல் நாளன்று வன்முறை அரங்கேறிய, சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் எந்த அரசியல் கட்சியும் கோரிக்கை விடுக்கவில்லை என்று சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். வாக்குப்பதிவு நேரத்தில் பொன்பரப்பியில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் பெண் வட்டாட்சியர் உள்ளிட்டோர் அனுமதியின்றி நுழைந்த விவகாரம் குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த நடராஜன் தாமாக முன்வந்து அறிக்கை அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சபாநாயகரை அதிமுக கொறடா மற்றும் சட்டத்துறை அமைச்சர் சந்தித்தது குறித்து எவ்வித புகாரும் வரவில்லை என்றும், புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com