தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அரசு அனுமதி தராது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவுக்கு இன்று அடிக்கல் நாட்டி பேசிய அவர் "விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்துக்கும் அதிமுக அரசு அனுமதியளிக்காது. முக்கியமாக காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி தராது. மேலும் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும்.
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு முதலில் அனுமதியளித்தது திமுகதான். ஸ்டாலின் முன்னிலையில்தான் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. நெடுவாசலில் பொய் பிரசாரம் செய்து எதிர்கட்சிகள் நாடகமாடி வருகின்றனர். அதிமுக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் எவ்வளவு அவதூரம் செய்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.