மத விவகாரங்களில் யாரும் தலையிட உரிமை இல்லை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

மத விவகாரங்களில் யாரும் தலையிட உரிமை இல்லை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்
மத விவகாரங்களில் யாரும் தலையிட உரிமை இல்லை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

பட்டணப் பிரவேசம் நடத்தியே தீருவோம். மடாதிபதிகள், ஜீயர்கள் முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜுயர் பேட்டியளித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “பட்டணப் பிரவேசம் செய்ய தடை விதித்திருப்பது மன வேதனை அளிக்கிறது. ஆதீனங்கள் விஷயத்திலும், மடாதிபதிகள் விஷயத்திலும், கோயில் விஷயத்திலும் யாரும் தலையிட்டு இதைச் செய்யக் கூடாது. அதைச் செய்யக் கூடாது என கூற அதிகாரம் இல்லை.

பட்டணப் பிரவேசம் தொடர்பாக ஆதீனங்கள், மடாதிபதிகள் முதல்வரை சந்தித்து பேச உள்ளோம். தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதுபோன்று ஆன்மிக விஷயத்தில் தலையிடுவதால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் உண்டாகி வருகிறது.

உறுதியாக தமிழக அரசு இதை ஏற்றுக்கொண்டு பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம். குருவை தூக்கிக் கொண்டாடும் விசயம் இது. இதில் யாரும் தலையிடக்கூடாது. பட்டணப் பிரவேசத்தை கண்டிப்பாக நடத்தியே தீருவோம்" என்றார்.

செண்டலங்கார ஜீயர், அமைச்சர்கள் நடமாட முடியாது எனக் கூறியது அவருடைய சொந்தக் கருத்து. மதுரை ஆதீனம் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் குறித்து தமிழக அரசுக்கு தெரிவித்து பாதுகாப்பு கேட்டு முறையிட வேண்டும்.

திமுகவுக்கு அவருடன் இருக்கும் சில கருப்பு புள்ளிகளால் கெட்ட பெயர் ஏற்படுகிறது. தோளில் சுமப்பது குறித்த விமர்சனத்திற்கு, கிரிக்கெட் வீரர் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றவுடன் தோளில் தூக்கிச் சுமக்கிறார்கள். எனவே மத விவகாரங்களில் இதைச் செய் அதைச் செய் என யாரும் தலையிட உரிமை கிடையாது’‘ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com