தமிழ்நாடு
சாயக்கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்: அமைச்சர் எச்சரிக்கை
சாயக்கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்: அமைச்சர் எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தில் நீர்நிலைகளில் சாயக்கழிவுகளை கலப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எச்சரித்துள்ளார்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் யாரும் உயிரிழக்கவில்லை எனத் தெரிவித்தார். டெங்கு குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய மருத்துவக் குழுவினர் தமிழக அரசின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளதாகவும் திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டார். நீர்நிலைகளில் சாயக்கழிவுகளை கலப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அவர் எச்சரித்தார்.

