ஜெயலலிதா மரணம்... தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயலலிதா மரணம்... தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயலலிதா மரணம்... தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்
Published on

முதல்வர் பதவியிலிருந்த ஜெயலலிதாவின் வீட்டில் போதிய மருத்துவ முன்னேற்பாடு வசதிகள் இல்லையா என எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம், பொதுமக்கள், கட்சிக்காரர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் எதிர்பார்ப்பது, ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்பதே. இதனால்தான் முதல்வர் பழனிச்சாமி, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் நீதி விசாரணை குழுவை நியமித்துள்ளார். அனைவரது சந்தேகங்களையும் விசாரணை ஆணையம் கவனத்தில் கொண்டு, விசாரணை முடிந்த பிறகு, குழுவின் விசாரணை அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்வார்கள். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதான் விசாரணை ஆணையத்தின் நடைமுறையாக இருக்கும். யார் இதில் தவறு செய்திருந்தாலும், அவர்கள் நீதிக்கு முன் பதில் சொல்லியாக வேண்டும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com