திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு யாராலும் தமிழ்நாட்டை ஆள முடியாது: செங்கோட்டையன்

திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு யாராலும் தமிழ்நாட்டை ஆள முடியாது: செங்கோட்டையன்
திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு யாராலும் தமிழ்நாட்டை ஆள முடியாது: செங்கோட்டையன்

தமிழ்நாட்டை திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது என அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், “ 2019-20-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின்போது உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 51.4 சதவீதமாக உயர்ந்தது. மாணவர்களின் வருகை பதிவையும் மாணவர்களின் தேர்வு முடிவையும் எஸ்எம்எஸ் மூலமாக அறிவிக்கும் திட்டத்தையும் அதிமுக அரசு கொண்டு வந்தது. இந்தியாவிற்கே முன் மாதிரியாக கல்வி தொலைக்காட்சியை கொண்டு வந்த பெருமை அதிமுக அரசை சாறும். ஐடெக் லேப்டாப் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. மத்திய அரசே இந்த திட்டங்களை பாராட்டி உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தேர்வு தேதிகளை பொறுத்தவரை கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே அதிமுக அரசு அறிவித்ததாக சுட்டிக்காட்டிய அவர், மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டதாகவும், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இந்த திட்டங்களை செயல்படுத்தினோம்" என்றும் தெரிவித்தார்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடாக இருந்தாலும், இந்திய நாட்டிலேயே அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் நீட் பயிற்சி அளிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இதன் காரணமாகவே மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் சூழல் உருவானது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டை திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது. தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிடாமல் மறுபரீசலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com