\
எம்ஜிஆர் பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் யாரும் அரசியல் செய்யமுடியாது: அன்வர் ராஜா

எம்ஜிஆர் பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் யாரும் அரசியல் செய்யமுடியாது: அன்வர் ராஜா

எம்ஜிஆர் பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் யாரும் அரசியல் செய்யமுடியாது: அன்வர் ராஜா
Published on

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34 வது நினைவு நாளையொட்டி முன்னாள் எம்பி அன்வர் ராஜா தனது வீட்டில் எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34 வது நினைவு தினமான இன்று தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி அன்வர் ராஜா ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர் முதல் முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் பேசும்போது, ‘’தமிழகத்தில் எம்ஜிஆரின் பெயரை உச்சரிக்காமல் யாராலும் அரசியல் செய்யமுடியாது. லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு உண்மையாகவே உதவிய ஒரே தலைவர் உலகத்தில் எம்ஜிஆர் மட்டுமே. அவர் இல்லாத நாளை எண்ணிப் பார்க்கிறேன். அவரோடு உறவாடிய தருணத்தை நினைத்து நினைத்து வாழ்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com