Seeman Minister Raghupathy
Seeman Minister Raghupathypt desk

"சீமான் எங்களுக்கு தூசு மாதிரி.. அவரது விவகாரத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை" – அமைச்சர் ரகுபதி

சீமான் விவகாரத்தில் திமுக பின்புலத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் இதில் தலையிடவில்லை. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் இந்த வழக்கு நடந்து வருகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
Published on

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்றைய தினம் பிறந்த 16 குழந்தைகளுக்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்எம்.அப்துல்லா புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் தங்க மோதிரங்களை வழங்கினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறுகையில்...

உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் சீமான் வழக்கு நடந்து வருகிறது:

சீமான் வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கு. ஏற்கனவே இதில் புகார் தாரராக உள்ள பெண்மணி சீமான் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதில், திமுக பின்புலத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் இதில் தலையிடவில்லை. உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கு நடந்து வருகிறது. சீமானை சமாளிக்கிறது எல்லாம் எங்களுக்கு தூசு மாதிரி. அவர் ஒரு பிரச்னையே கிடையாது. நாங்கள் இதில் தலையிடவில்லை. சீமான் தான் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார்.

Seeman Minister Raghupathy
"நான் மட்டும் ஆட்சியில் இருந்தால் பாலியல் குற்றவாளிகளின் அந்த இடத்தை.." - அன்புமணி ஆவேசம்

சீமான் மீது 72க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது:

இதையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடுமையானது இது என்று கூறியது. நீதிமன்றம் தந்த அழுத்தத்தில்தான் இந்த வழக்கு நடைபெறுகிறது. சீமான் மீது 72க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. எல்லா வழக்குகளையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. நிச்சயமாக அப்படியே நடக்கும்.

இந்தியா கூட்டணியால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்:

இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த விழாவில் சிறப்பாக தெளிவாக தனது நிலைப்பாட்டை திருமாவளவன் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அது ஒன்று போதும். இந்த கூட்டணி தான் தொடரும். இந்தியா கூட்டணியால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும். இந்தக் கூட்டணி முன்னெடுக்கின்ற கொள்கைதான் இந்தியாவுக்கு வழிகாட்டுகின்ற கொள்கையாக அமையும் என்றெல்லாம் வலியுறுத்தி கூறி, முதலமைச்சர் தலைமையில் இயங்குகின்ற இந்த கூட்டணிக்கு முழு ஆதரவையும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Seeman Minister Raghupathy
“என்னை பாலியல் குற்றவாளி என நீங்கள் எப்படி கூறுவீர்கள்? நீங்கள் என்ன நீதிபதியா?" - சீமான் ஆவேசம்!

தென் இந்திய நலனுக்காக நடத்தப்படுகின்ற அனைத்து கட்சிக் கூட்டம்:

அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டியதற்கான காரணம் தொகுதி மறு சீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. ஒரு இடம் கூட குறையக் கூடாது. அதே நிலையில் வட மாநிலத்தில் ஒரு இடம் கூட கூட்டக் கூடாது. மக்கள் தொகை மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு இது எண்ணிக்கை அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் தென் இந்திய நலனுக்காக நடத்தப்படுகின்ற அனைத்து கட்சிக் கூட்டம்.

CM MK Stalin
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தென்னிந்திய நலனில் அக்கறை இல்லாத அரசியல் கட்சிகள்:

தென்னிந்திய நலனில் அக்கறை இல்லாத கட்சிகள் கலந்து கொள்ளவில்லை என்றால் எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை.

தெலுங்கானா, கர்நாடகா போன்ற முதலமைச்சர்கள் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வட மாநிலங்களில் தொகுதிகள் குறைகின்ற மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள் இதற்கு நிச்சயமாக குரல் எழுப்புவார்கள்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com