காதலிக்கும்படி பெண்ணை வற்புறுத்தும் உரிமை ஆணுக்கு இல்லை - உயர்நீதிமன்றம்

காதலிக்கும்படி பெண்ணை வற்புறுத்தும் உரிமை ஆணுக்கு இல்லை - உயர்நீதிமன்றம்
காதலிக்கும்படி பெண்ணை வற்புறுத்தும் உரிமை ஆணுக்கு இல்லை - உயர்நீதிமன்றம்

தன்னை காதலிக்கும்படி ஒரு பெண்ணை வற்புறுத்தும் உரிமை ஆணுக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் ஒருவரை கத்தியால் குத்தியதால் கைது‌ செய்யப்பட்ட நபரின் சார்பில், ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அந்த நபருக்கு ஜாமீன் தர மறுத்தார். மேலும், அவருக்கு மனநல ஆலோசனை அளிக்கவும் நீதிபதி ஆணையிட்டார்.

தன்னை காதலிக்குமாறு எந்த ஒரு‌ பெண்ணையும் வற்புறுத்தும் உரிமை, எந்த ஒரு ஆணுக்கும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். பெண் என்பவர் தனது விருப்பங்களுக்கெல்லாம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற ஆணின் எண்ணமே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேற காரணம் என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், பெண் பழகும் முறைகளே அவரை மணம் முடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்படுத்துவதாகவும், அதற்காக பெண்ணை கத்தியால் குத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது அவர் குறிப்பிட்டார். எனினும், இதுபோன்ற வழக்குகளில் அனுதாபம் காட்டுவதை நீதிமன்றங்கள் நிறுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com