\
தீபாவளிக்கு லட்டு பிரசாதம் இல்லை: மீனாட்சியம்மன் கோயில் அறிவிப்பு

தீபாவளிக்கு லட்டு பிரசாதம் இல்லை: மீனாட்சியம்மன் கோயில் அறிவிப்பு

தீபாவளிக்கு லட்டு பிரசாதம் இல்லை: மீனாட்சியம்மன் கோயில் அறிவிப்பு
Published on

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் லட்டு பிரசாதமாக வழங்குவதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலகபிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் சில நாள்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து லட்டு தயாரிப்பு மற்றும் இயந்திரங்களுக்கான ஒப்பந்தம் விடப்பட்டது. 

இந்நிலையில் தூய்மையான முறையில் லட்டுகளை தயாரிப்பதற்காக இயந்திரம் வாங்க வேண்டியது உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவகிறது. ஆகவே திட்டமிட்டபடி தீபாவளி தினத்திலிருந்து லட்டு வழங்க முடியாது என்பதால் வேறொரு தேதியில் லட்டு வழங்குவதற்கான பணிகள் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தின் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு மதுரை மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com