தமிழ்நாடு
ஆதித்யநாத் நியமனத்தில் தலையீடு இல்லை: ஆர்எஸ்எஸ் விளக்கம்
ஆதித்யநாத் நியமனத்தில் தலையீடு இல்லை: ஆர்எஸ்எஸ் விளக்கம்
உத்தர பிரதேச முதலமைச்சராக ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டதில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என ஆர்எஸ்எஸ் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர் தேர்வு என்பது முற்றிலும் அரசியல் ரீதியானது என்றும் இதில் தாங்கள் எவ்வித நிர்பந்தமும் அளிப்பதில்லை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணை பொதுச் செயலாளர் பாகையா தெரிவித்தார்.இதற்கிடையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய அளவிலான கூட்டம் கோவையில் தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இக்கூட்டத்தில் நாடெங்கும் இருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஆயிரத்து 400 பேர் பங்கேற்கின்றனர்.

