லாக் டவுன் காலத்திலும் தங்கு தடையில்லாமல் புகையிலை பயன்பாடு: ஆய்வில் தகவல்

லாக் டவுன் காலத்திலும் தங்கு தடையில்லாமல் புகையிலை பயன்பாடு: ஆய்வில் தகவல்
லாக் டவுன் காலத்திலும் தங்கு தடையில்லாமல் புகையிலை பயன்பாடு: ஆய்வில் தகவல்

கொரோனா பொது முடக்க காலத்தில் புகையிலை பொருட்கள் கிடைப்பதில் எந்தத் தொய்வும் ஏற்படவில்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Tobacco Cessation Clinic என்ற அமைப்பு பொது முடக்க காலத்தில் புகையிலை புழக்கம் தமிழகத்தில் எவ்வாறு இருந்தது என்ற ஆய்வை புகையிலை பொருள்களை பயன்படுத்துவோரிடம் மேற்கொண்டது. அதில் 60 சதவிதம் பேர் பொது முடக்க காலத்தில் புகையிலை பொருள்கள் எளிதாக கிடைத்தது என்று தெரிவித்துள்ளனர். கொரோனா பொது முடக்க காலம் மார்ச் இறுதியில் இருந்து மே மாதம் வரை மிகக் கடுமையாக பின்பற்றப்பட்டது.

அப்போதைய காலக்கட்டத்தில் பல கடைகள் குறிப்பிட்ட சில நேரத்தில் மட்டுமே திறக்கப்பட்டது. இதனால் புகையிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றும் விற்பனை சரியும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 60 சதவிதம் பேர் புகையிலை பொருள்கள் கிடைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். இதில் மூன்றில் ஒரு சதவிதம் பேர் தாங்கள் வழக்கமாக புகையிலை பொருள்களை வாங்கும் கடைகளில் மொத்தமாக வாங்கி வைத்து பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

அதில் 6 சதவிதத்தினர் மட்டுமே தினசரி கடைகளுக்கு சென்று புகையிலை பொருள்களை வாங்கும் வழக்கத்தை பொது முடக்க காலத்தில் மேற்கொண்டிருந்தனர். மேலும் 38 சதவிதம் பேர் பொது முடக்க காலத்தை பயன்படுத்தி புகையிலை பொருள்களை பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர். மேலும் சிலர் பொது முடக்கத்தின் சில நாள்கள் மட்டும் புகையிலையை பயன்படுத்தாமல் தவிர்த்து பின்பு மீண்டும் பயன்படுத்தியதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com