சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் சொல்வதில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் சொல்வதில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து

சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்ட எந்தக் கடவுளும் சொல்வதில்லை: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
Published on
‘சாலைகளை ஆக்கிரமித்து கோயில்கள் கட்டும்படி, எந்த மதக்கடவுளும் பக்தர்களிடம் கேட்பதில்லை’ என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை ஓட்டேரி பகுதியில் நடைப்பாதைகளை மற்றும் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் கடைகளை அகற்ற கோரி தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “ஓட்டேரி பகுதியில் பாதசாரிகள் நடக்க முடியாத அளவிற்கு  நடைப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கோவில்களும் அதன் அருகில் அனுமதி பெறாத கடைகளும் அதிகரித்து வருகிறது. இதனால் ஒட்டேரி செல்லப்பா சாலையில் நடக்க முடியாத நிலை ஏற்படுள்ளது” எனக்கூறி, அதற்கான புகைப்படங்களை தாக்கல் செய்தார். வாதத்தின் ஒருபகுதியாக, கடந்த காலங்களில் சென்னை உயர் நீதிமன்றத்தின் வெளிப்பகுதியில் இதேபோல நடைபாதையை ஆக்கிரமித்திருந்த கோயிலை கூட நீதிமன்ற உத்தரவால் அகற்றப்பட்டதை மனுதாரர் மேற்கோளாக காட்டினார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், “சாலைகளை ஆக்கிரமித்து கோவில்களை கட்ட வேண்டும் என எந்த மதக்கடவுளும் மனிதனிடம் கேட்பதில்லை. ஆனாலும் மதத்தின் பெயரை எந்தெந்த வகையிலெல்லாம் தவறாக பயன்படுத்த முடியுமோ, அந்த வகையிலெல்லாம் மனிதர்கள் பயன்படுத்திவிடுகின்றனர். இப்படி தவறாக பயன்படுத்துவது மனிதன் மட்டுமே” என வேதனை தெரிவித்தனர். அதன் பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், “சாலை மற்றும் நடைப்பாதையை ஆக்கிரமித்ததாக மனுதாரர் தெரிவிக்கும் ஒட்டேரி பகுதியில் சாலை, நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பதை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” எனக்கூறி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com