வருமானவரிச் சோதனை தொடர்பான ஆவணங்கள் வெளியானது குறித்துக் கருத்துத் தெரிவித்த அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டிடிவி தினகரன் ஜெயலலிதாவிடம் தாங்கள் அரசியல் பயின்றதாகவும் தங்களுக்கு அச்சம் எதுவுமில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர் ஒவ்வொருவருக்கும் ரூ. 4 ஆயிரம் வீதம் வழங்க 89 கோடி வரையில் செலவழிக்க அதிமுக அம்மா அணி திட்டமிட்டிருந்ததாக வருமானவரிச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன். பொது வாழ்வில் எதிரிகள், சூழ்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். வெளியானதாக கூறப்படும் ஆவணத்திற்கு எந்தவித நம்பகத்தன்மையும் இல்லை எனக் கூறினார். மேலும், நாங்கள் ஜெயலலிதாவிடம் அரசியல் பயின்றுள்ளோம் எங்களுக்கு எந்தவித அச்சமுமில்லை என தெரிவித்துள்ளார்.