சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல வழங்கப்பட்டு வந்த இ- பாஸ் முறையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,841 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 326 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,937ஆக உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் ராயபுரத்தில் மட்டும் 4,405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 19 பேர் உயிரிழந்தனர். அதேபோல் இன்று மட்டும் சென்னையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் சென்னை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் முறையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.