சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: 23-ம் தேதி சட்டசபையில் வாக்கெடுப்பு

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: 23-ம் தேதி சட்டசபையில் வாக்கெடுப்பு

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: 23-ம் தேதி சட்டசபையில் வாக்கெடுப்பு
Published on

சபாநாயகர் தனபாலை நீக்க கோரும் தீர்மானத்தின் மீது, நாளை மறுநாள் (23-ம் தேதி) சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை மீது கடந்த மாதம் 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஏற்காத சபாநாயகர் தனபால், எண்ணிக் கணக்கெடுப்பு முறையில் வாக்கெடுப்பு நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், சபாநாயகர் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாக திமுக குற்றம்சாட்டியது. அதோடு, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் அவரை நீக்க கோரும் கடிதத்தையும் மு.க.ஸ்டாலின் 9-ம் தேதி கொடுத்தார். சட்டப்பேரவை விதி 68-ன்படி, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதம் கொடுத்த 14 நாட்களுக்குப் பிறகுதான் சட்டப்பேரவையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதன்படி, நாளையுடன் 14 நாள் முடிகிறது. இதனால் 23ம் தேதி, சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம், வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இந்தப் பிரச்னை விவாதத்துக்கு வரும்போது சபாநாயகர் தனபால், சபையை நடத்த மாட்டார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நடத்துவார். விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடைபெறும். இந்த வாக்கெடுப்பில் அன்றைய கூட்டத்தில் பங்கேற்கும் எம்எல்ஏக்களில், பாதிக்கு மேல் வாக்குபெறாவிட்டால் தனபால் சபாநாயகர் பதவியை இழக்க நேரிடும். தனபாலுக்கு எதிராக வாக்களிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com