ஆர்.கே.நகர் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடப் போவதில்லை என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா ? அல்லது வேறு யாரையாவது ஆதரிப்பதா என்பது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே முரண்பட்ட கருத்து நிலவி வந்தது. மக்கள் நலக் கூட்டியகத்தில் உள்ள மற்ற கட்சிகளின் மாறுபட்ட கருத்தே தாமதத்துக்கு காரணம் என திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட போவதில்லை எனத் தெரிவித்தார். மக்களுக்கான பிரச்னைகளுக்கான போராட்டக் களத்தில் கூட்டியக்கமாக செயல்படுவதில் சங்கடம் இல்லை என்றும் அதே சமயத்தில் தேர்தலில் தனித்தனியாகச் செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் திருமாவளவன் கூறினார். இதற்கிடையில் ஆர்.கே.நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆர்.லோகநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார்.