\
தமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பில்லை - அமைச்சர் பாண்டியராஜன்

தமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பில்லை - அமைச்சர் பாண்டியராஜன்

தமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பில்லை - அமைச்சர் பாண்டியராஜன்
Published on

தமிழகத்தில் தேர்தல் தள்ளிவைப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் பேட்டியளித்துள்ளார்.


ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு பகுதியில் மருத்துவ முகாமை தொடங்கிவைத்த அமைச்சர் பாண்டியராஜன், அந்தப் பகுதிகளில் உள்ள கால்வாய் மற்றும் அரசு நிலங்கள் சம்பந்தமான பகுதிகளை பார்வையிட்டார் அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது.


பீகார் மாநிலத்தில் எந்த நாளில் தேர்தல் நடக்க வேண்டுமோ அந்த நாளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மே 23ம் தேதிக்குள் தமிழகத்தில் தேர்தல் நடக்கும், நம்மைவிட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலத்தில் தேர்தல் நடத்துகிறார்கள். இன்னும் 8 மாதத்திற்குள் கொரோனா இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும் பாரத பிரதமரே நமது முதல்வரை பாராட்டி உள்ளார்.


தமிழகத்தில் தேர்தல் தள்ளிவைப்புக்கான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை என நான் நினைக்கிறேன். அடுத்த ஆண்டு மே மாதம் கண்டிப்பாக தேர்தல் நடக்கும். மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி மலர்ந்தது என்ற செய்தி தெரியும் என தெரிவித்தார்.


மேலும் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்து கேட்டபோது மறைந்த முதல்வர் ஜெயலலிதவுக்கான பாடலை பலரும் பாட தயங்கிய காலத்தில் அவருக்காக பாடியவர் பாலசுப்ரமணியம் இப்போதும் அதிமுக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த பாடல் முதலில் ஒலிக்கும், 4 தலைமுறைகளுக்கான பாடல்களை பாடி உள்ளார்.
அவரது உடல் தாமரைப்பாக்கத்தில் விதைக்கப்பட்டு இருப்பது திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள எங்களுக்கு பெருமை தரக்கூடிய விஷயமாக கருதுகிறோம் என தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com