தமிழ்நாடு
யாஸ் புயல் எதிரொலி - கடலோர துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
யாஸ் புயல் எதிரொலி - கடலோர துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை யாஸ் புயலாக வலுவடையும் நிலையில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் வலுவடைந்து வருவதால் தமிழகத்தின் நாகை, காரைக்கால், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூரின் எண்ணூர் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் யாஸ் புயல் உருவாவதையடுத்து 4 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்திவருகிறார்.