என்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்
என்.எல்.சி 2வது சுரங்கத்தில் பணியாற்றிய ஊழியர் பழனிவேலை அவரது மனைவியே அடித்துக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்.எல்.சி ஊழியராக பணியாற்றி வந்தவர் பழனிவேல். இவரது மனைவி அஞ்சலை. இந்நிலையில் பழனிவேல் காரில் கடத்திக் கொலை செய்யப்பட்டார். பின்னர் விழுப்புரம், சின்னசேலம் அருகே செம்பாக்குறிச்சி வனப்பகுதியில் பழனிவேலின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பழனிவேலின் சடலம் விழுப்புரம் சின்னசேலம் அருகே கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து மனைவி அஞ்சலை உள்பட 4 பேர் சேர்ந்து பழனிவேலை அடித்து கொன்றதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கொலை தொடர்பாக அஞ்சலையிடம் விசாரணை நடத்தும் நெய்வேலி டவுன்சிப் போலீஸ் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். விபத்து என நாடகமாட செம்பாக்குறிச்சி வனப்பகுதியில் பழனிவேலின் சடலத்துடன் காரை எரிக்க முயன்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.