என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் தற்கொலை முயற்சி
நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் 49 தொழிலாளர்களுக்கு அதே தொழிற்சாலையில் வேறு இடத்தில் பணி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே பணியிட மாற்றம் செய்யாமல் மீண்டும் பழைய இடத்தில் பணி வழங்க வேண்டும் எனக்கோரி கடந்த 1 மாதத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று 25 ஒப்பந்த தொழிலாளர்கள் கையில் வைத்திருந்த விஷத்தை அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 5 பேருக்கு என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 20 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து என்எல்சி தொழிலாளர்கள் கூறும்போது, தொடர்ச்சியாக சிரமமான வேலையை என்எல்சி நிர்வாகம் கொடுப்பதாகவும், அடிக்கடி பணிமாற்றம் செய்வதையும் வழக்கமாக கொண்டிருப்பதாக புகார் கூறினர்.