என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர் பேச்சுவார்த்தை தோல்வி: வேலை நிறுத்தம் பற்றி 2ம் தேதி அறிவிப்பு
நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது குறித்து வரும் 2ம் தேதி அறிவிக்கப்படும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ட ஊதியத்தை வழங்க தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக புதுச்சேரியில் மத்திய உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையர் கணேசன் தலைமையில் தொழிற்சங்கத்தினர், என்.எல்.சி நிர்வாகத்தினர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் வெங்கடேசன், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது குறித்து 2ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்றார்.