\
உருவானது 'நிவர்' புயல்!

உருவானது 'நிவர்' புயல்!

உருவானது 'நிவர்' புயல்!
Published on

வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது.

தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்தம் 'நிவர்' புயல் வங்கக் கடலில் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் இன்று இரவு தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகலில் மகாபலிபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்க  வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றம் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com