\
அதிதீவிர புயலாக வலுபெற்றது நிவர்!

அதிதீவிர புயலாக வலுபெற்றது நிவர்!

அதிதீவிர புயலாக வலுபெற்றது நிவர்!
Published on

கடந்த 6 மணி நேரத்தில் 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிவர் புயல், தற்போது அதிதீவிர புயலாக மாறி 16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கக்கூடும் எனவும், இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

மேலும், இன்று மதியம் அதி தீவிரபுயலாக வலுப்பெறக்கூடும் என்று அறிவித்திருந்த நிலையில், நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, கடலூரில் இருந்து 90 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com