\
நடிகையுடன் வீடியோவில் இருந்தது நித்யானந்தாதான்: தடயவியல்துறை உறுதி

நடிகையுடன் வீடியோவில் இருந்தது நித்யானந்தாதான்: தடயவியல்துறை உறுதி

நடிகையுடன் வீடியோவில் இருந்தது நித்யானந்தாதான்: தடயவியல்துறை உறுதி
Published on: 

2010 ஆம் ஆண்டு நித்தியானந்தா நடிகையுடன் இருப்பது போன்று வெளியான வீடியோ உண்மையானதே என தடயவியல் ஆய்வில் தற்போது தெரியவந்துள்ளது. 

7 ஆண்டுகளுக்கு பின், நித்தியானந்தா வீடியோவின் உண்மைத்தன்மையை டெல்லி தடயவியல் துறை தற்போது உறுதி செய்துள்ளது. 2010ஆம் ஆண்டு நடிகையுடன் இருப்பது போன்ற வீடியோ தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது. இது போலியான வீடியோ என்று நித்தியானந்தா தியான பீடத்தின் நிர்வாகி ஒருவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

பின்னர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விசாரித்து வந்தனர். கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த வீடியோவில் இருப்பது நித்யானந்தாதான் என தடயவியல் ஆய்வு உறுதி செய்துள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com