லிங்கத்தை அசைப்பதற்கு நான் நாத்திகனா ? - நித்யானந்தாவின் சர்ச்சை பேச்சு

லிங்கத்தை அசைப்பதற்கு நான் நாத்திகனா ? - நித்யானந்தாவின் சர்ச்சை பேச்சு

லிங்கத்தை அசைப்பதற்கு நான் நாத்திகனா ? - நித்யானந்தாவின் சர்ச்சை பேச்சு
Published on

மேட்டூர் ஜலகண்டேசுவரர் ஆலய மூலவர் லிங்கம் தன்னிடம் இருப்பதாக நித்யானந்தா கூறிய நிலையில், தன்னுடைய பேச்சுக்கு புதிய விளக்கம் அளித்துள்ளார்.

மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியான பன்னவாடி கிராமத்தில், சோழ மன்னர் காலத்தில் ஜலகண்டேசுவரர் கோவில் கட்டப்பட்டது. சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான இந்த கோயிலில், பூஜை செய்வதற்காக 14 நாயன்மார்கள் பணி அமர்த்தப்பட்டிருந்ததாக குறிப்புகள் உள்ளன. சமீபத்தில் பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் சொற்பொழிவாற்றிய நித்யானந்தா, ஜலகண்டேசுவர் கோயிலை தாம் முந்தைய ஜென்மத்தில் கட்டியதாக பேசினார். 

அதுமட்டுமின்றி, அந்த கோயிலின் மூலவர் லிங்கம் தன்னிடம் தான் உள்ளதாக அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரமாகிய நிலையில், நித்யானந்தாவிடம் உள்ள மூலவர் லிங்கத்தை மீட்டுத் தர வேண்டுமென காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நித்யானந்தா தமது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார்.

பூஜை செய்த லிங்கத்தைக் அசைப்பதற்கு தான் நாத்திகனா என கேள்வி எழுப்பியுள்ள நித்யானந்தா, கோவில்களை அழிப்பதற்கு தான் நாத்திக ரவுடி கும்பலைச் சேர்ந்தவன் அல்ல என பேசியிருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டிகிறது. நித்யானந்தாவின் பேச்சுக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், பாலவாடி கிராம மக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com