‘கைலாசாவில் குடியுரிமைக் கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பம்’ - நித்யானந்தா

‘கைலாசாவில் குடியுரிமைக் கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பம்’ - நித்யானந்தா

‘கைலாசாவில் குடியுரிமைக் கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பம்’ - நித்யானந்தா
Published on

கைலாசாவுக்கு குடியுரிமைக் கேட்டு சுமார் 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும்‌, ‘கைலாசா’ ‌தனிநாடு அமைந்தே தீரும் எனவும் நித்யானந்தா ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். 

குழந்தைக் கடத்தல், பாலியல் புகார் என நித்யானந்தா மீது பெண் சீடர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், ‌ஆண் சீடர்களுக்கும் நித்யானந்தா பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புதிய புகார் எழுந்தது. இந்தப் புகாரை முன்வைத்ததால் நித்யானந்தாவின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் முன்னாள் சீடர் விஜயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் நித்யானந்தாவின் ஆதரவாளர்கள், பணம் பறிப்பதற்காக விஜயகுமார் பொய் புகார் அளித்துள்ளதாக கூறி, விஜயகுமார் பணம் கேட்கும் ஆடியோவை வெளியிட்டனர். இந்நிலையில், வழக்‌கம்போல் சமூக வலைத்தளத்தில் தோன்றி சொற்பொழிவாற்றிய நித்யானந்தா, 2003ஆம் ஆண்டு முதல்‌ தான் சந்திக்காத குற்றப் பிரிவுகளே இல்லை என காமெடியாகவே பேச்சை தொடங்கினார். 

தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் தான் நிரபராதி ‌என‌ நிரூபித்துள்ளதாக புருவத்தையும் குரலையும் சற்று உயர்த்தி பேசிய அவர், ஆன்மீகத் துறையில் தான் என்றோ தலைவனாகிவிட்‌டதாக கூறினார். கைலாசாவில் குடியுரிமை கோரி‌ 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் சற்று ஆவேசமாகப் பேசி நித்யானந்தா சவால் விடுத்தார். 

வரும் 18ஆம் தேதிக்குள் நித்யானந்தாவை கண்டுபிடிக்க பெங்களூரு காவல்துறைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மீண்டும் ‘கைலாசா’,  ‘மீனாட்சி மீனாட்சி’ என ‌அவ்வப்போது ‌வலைத்தளத்தில் தோன்றுவதும் மறைவதுமாக கண்ணாமூச்சி விளையாடி வருகிறார் நித்யானந்தா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com