தமிழ்நாடு
பியுஷ் முகநூலை முடக்கிய நித்தியானந்தா ஆதரவாளர்கள்
பியுஷ் முகநூலை முடக்கிய நித்தியானந்தா ஆதரவாளர்கள்
போலி சாமியார்கள் குறித்து சமூக செயற்பாட்டாளர் பியுஷ் மனுஷ் பதிவிட்டதால் அவரது முகநூல் பதிவை நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் தடுத்து வைத்துள்ளனர்.
ஹரியானாவைச் சேர்ந்த சாமியார் ராம் ரஹீம் சிங் பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பெற்றுள்ளார். அதுபற்றி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பியுஷ் மனுஷ், சர்ச்சைக்குரிய சில சாமியார்களின் படங்களை தொகுப்பாக வெளியிட்டுள்ளார். அதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்தா சாமியாரின் படத்தையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து, ஆத்திரமடைந்த நித்யானந்தாவின் ஆதரவாளர்கள், பியுஷ் மனுஷின் முகநூல் பக்கத்தில் கூடுதல் பதிவுகளை அவர் வெளியிட முடியாதவாறு தடை ஏற்படுத்தியுள்ளனர்.