மதுரை மாநாடு| அரசியல் தலைவர்களுக்கு ‘History Of Kailash' புத்தகம் வழங்கிய நித்தியானந்தா சீடர்கள்!
மதுரையில் நடைபெறும் ஆன்மீக முருகன் மாநாட்டிற்கு கைலாசா திருஞான சன்னிதானம் நித்தியானந்தாவிற்கும் இந்து முன்னணியினர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘History Of Kailash' புத்தகம் வழங்கிய சீடர்கள்!
இந்நிலையில் நித்தியானந்தாவின் தூதராக திருவண்ணாமலை சேலம் உள்ளிட்ட பகுதியில் உள்ள நித்தியானந்தா சீடர்கள் 25க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்க வந்தனர்.
முன்னதாக முருகன் நாட்டில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த இந்து முன்னணி மற்றும் பாஜக தலைவர்களுக்கு கைலாசா பகவான் ஸ்ரீ நித்யானந்தா பரமசிவம் சார்பில் United State of Kailash மற்றும் History of kailash உள்ளிட்ட புத்தகங்களை கொடுத்து வரவேற்றனர்.
மேலும் பேட்டியளித்த நித்தியானந்தா சீடர்கள், தங்களுடைய கடவுள் நித்தியானந்தா கட்டளையிட்டதின் பெயரால் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள திருவண்ணாமலையிலிருந்து வந்ததாகவும், சீமான், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு History of kailash புத்தகத்தை வழங்கியதாகவும் தெரிவித்தனர்.