\
ஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது

ஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது

ஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது
Published on

ஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டார். அவர் வீட்டில் இருந்து 4 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஆர்.ஜெயபாலன் (38). ஒடிசா மாநிலம் ரூர்கேலா (Rourkela) வில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி) உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மாலினி (35). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. ஜெயபாலன் தனது மனைவியுடன் ரூர்கேலாவில் உள்ள என்.ஐ.டி. கல்லூரி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஜெயபாலனின் வீடு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத் தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நேற்று வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர். அங்கு ஜெயபாலனும் அவர் மனைவியும் இறந்துகிடந்தனர். இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. உடலை கைப்பற்றிய போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

’’ ஜெயபாலன் எழுதிய 4 பக்க கடிதம் வீட்டில் கிடைத்துள்ளது. அதில், தங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் குழந்தை இல்லாத ஏக்கத்தால் தற்கொலை செய்துகொண்டதாகவும் தங்கள் பெற்றோர், இந்த முடிவுக்காகத் தங்களை மன்னிக்க வேண்டும் என்றும் எழுதியுள்ளனர். மேலும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று ரூர்கேலா எஸ்.பி, சர்தாக் சாரங்கி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com